Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1662: சீன ஜெனரல் கோக்ஸிங்கா, 9 மாதகால முற்றுகையின்பின் தாய்வான் தீவைக் கைப்பற்றினார்.
1793: பிரிட்டன், நெதர்லாந்து மீது பிரான்ஸ் யுத்தப் பிரகடனம் செய்தது.
1814: பிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்ததால் 1200 பேர் பலி.
1835: மொரிசியஷில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1865: அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டார்.
1924: சோவியத் யூனியனை பிரிட்டன் அங்கீகரித்தது.
1958: எகிப்தும் சிரியாவும் இணைந்த ஐக்கிய அரபு குடியரசை ஸ்தாபித்தன.
1974: கோலாலம்பூர் நகரம் சமஷ்டி பிராந்தியமாக்கப்பட்டது.
1979: ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி 15 ஆண்டுகள் அஞ்ஞான வாசத்தின்பின் ஈரானுக்குத் திரும்பினார்.
1982: செனகலும் காம்பியாவும் இணைந்து செனகாம்பியா கூட்டுச் சம்மேளனத்தை உருவாக்கின.
2003: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய கொலம்பிய விண்கலம் வெடித்துச்சிதறியதால் 7 விண்வெளி வீர வீராங்கனைகள் உயிரிழந்தனர்.
2009: ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமராக ஜோனா சிகுரோடோட்டிர் தெரிவானார். நவீன உலகில் ஓரின சேர்க்கையாளராக அறியப்பட்ட ஒருவர் அரசாங்கமொன்றின் தலைவராக தெரிவாகியமை அதுவே முதல் தடவையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .