Menaka Mookandi / 2016 ஏப்ரல் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1606: பிரிட்டனின் தேசிய கொடியாக யூனியன் ஜக் கொடி அங்கீகரிக்கப்பட்டது.
1633: ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின.
1832: இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையை பிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.
1927: ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1945: அமெரிக்க ஜனாதிபதி பிராங்ளின் டி ரூஸ்வெல்ட் காலமானார். உப ஜனாதிபதி ஹரி ட்ரூமன் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
1955: டாக்டர் ஜோனாஸ் சால்க்கினால் தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பு மருந்து பாதுகாப்பானது எனவும் வினைத்திறனானது எனவும் அங்கீகரிக்கப்பட்டது.
1961: சோவியத் யூனியனின் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்றார். விண்வெளிக்கு மனிதர் ஒருவர் சென்றமை இதுவே முதல் தடவையாகும்.
1970: சோவியத் யூனியனின் அணுவாயுதங்களைக் கொண்ட நீர்மூழ்கியொன்று தீப்பற்றியதால் கடலில் மூழ்கியது.
1975: கம்போடியாவிலிருந்து அமெரிக்கா வெளியேறியது.
1980: லைபீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். இதனால் 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது.
1983: பிரித்தானியத் திரைப்படமான 'காந்தி' எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது.
1995: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன், பாலியல் தொந்தரவு வழக்கில் பொய் கூறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டார்.
1996: யாஹூவினது முதற் பொதுப்பங்கு வழங்கப்பட்டது.
11 minute ago
20 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
26 minute ago
37 minute ago