Menaka Mookandi / 2016 மார்ச் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1665: இரண்டாவது ஆங்கில- டச்சு யுத்தம் ஆரம்பமாகியது.
1797: முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனிடமிருந்து இரண்டாவது ஜனாதிபதி ஜோன் அடம்ஸுக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டது. நவீன யுகத்தில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களுக்கிடையில் அமைதியான முறையில் அதிகாரம் பரிமாற்றப்பட்ட முதல் சந்தர்பப்ம் இதுவாகும்.
1861: ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.
பிரிட்டனில் முதலாவது இலத்திரனியல் ட்ராம் வண்டிகள் அறிமுகமாகின.
1975: பிரித்தானிய நகைச்சுவை நடிகர் சார்ளி சாப்ளினுக்கு பிரித்தானிய அரசாங்கத்தினால் சேர் பட்டம் வழங்கப்பட்டது.
1977: கிழக்கு ஐரோப்பாவில் பூகம்பத்தால் 1500 இற்கும் அதிகமானோர் பலி.
1980: ஸிம்பாப்வேயில் ரொபர்ட் முகாபே முதலாவது கறுப்பின ஜனாதிபதியானார்.
1991: ஈராக்கிய ஆக்கிரமிப்பின் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறிய குவைத் பிரதமர் அல் சலீம் அல் சபாஹ் தாயகம் திரும்பினார்.
1994: கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
2001: லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
2001: போர்த்துக்கலில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
2006: பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
2006: அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.
2009: சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து (ஐ.சி.சி.) பிறப்பித்தது. பதவியிலுள்ள நாடொன்றின் தலைவருக்கு எதிராக ஐ.சி.சி. பிடிவிறாந்து பிறப்பித்தமை இதுவே முதல் தடவை.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago