2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று : ஒக்டோபர் 13

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

54: ரோமில் நீரோ மன்னனுக்கு முடிசூட்டப்பட்டது.

1775: அமெரிக்க கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1923: இஸ்தான்புல்லுக்குப் பதிலாக அங்காரா துருக்கியின் தலைநகராக மாற்றப்பட்டது.

1943: இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனிக்கு ஆதரவாக விளங்கிய இத்தாலி நேசநாடுக்கு சார்பானதாக மாறி ஜேர்மனிக்கு எதிராக போர் பிரகடனம் செய்தது.

1970: ஐ.நாவில் பிஜி இணைந்தது.

1972: மொஸ்கோவில் விமான விமான விபத்தில் 176 பேர் பலி.

1972: உருகுவே விமானப்படை விமானமொன்று விபத்துக்குள்ளானது. 46 பயணிகளில் 16 பேர்  டிசெம்பர் 23 ஆம் திகதி உயிருடன் மீட்கப்பட்டனர்.

1976: பொலிவியாவின் போயிங் 707 ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகி 100 பேர் பலி.

1977: லுப்தான்ஸா விமான சேவை நிறுவனத்தின் விமானமொன்று பலஸ்தீன தீவிரவாதிகளால் சோமாலியாவுக்கு கடத்தப்பட்டது.

1983: அம்ரிடெக் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் (AT&T) செல்லிடத் தொலைபேசி வலையமைப்பு அமெரிக்காவின் சிகாகோவில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே அமெரிக்காவின் முதல் செலூலர் வலையமைப்பாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .