Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 04 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1918 : அமெரிக்காவில் நியூ செர்சியில் ஷெல் கம்பனியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1943 : இரண்டாம் உலகப் போர் - ஐக்கிய அமெரிக்கா சொலமன் தீவுகளைக் கைப்பற்றியது.
1957 : பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக சிங்கள இனவாதிகள் கண்டிக்கு நடைப்பயணம் நடத்தினர்.
1957 : புவியைச் சுற்றி வந்த முதலாவது செயற்கைக்கோள் என்ற சாதனையை சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் 1 ஏற்படுத்தியது.
1959 : லூனா 3 விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது.
1960 : அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் விமானம் ஒன்று பறவையினால் தாக்கப்பட்டு வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த 72 பேரில் 62 பேர் உயிரிழந்தனர்.
1963 : கியூபா, எயிட்டி ஆகிய நாடுகளைத் சூறாவளி புளோரா தாக்கியதில் 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1966 : பசூட்டோலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று லெசோத்தோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1985 : கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை நிறுவப்பட்டது.
1992 : மொசாம்பிக்கின் 16 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1992 : ஆம்ஸ்டர்டாம் நகரில் குடியிருப்பு மனைகள் மீது விமானம் ஒன்று மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.
1993 : ரஷ்யத் தலைவர் போரிசு யெல்ட்சினுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தாங்கிகள் நாடாளுமன்றத்தின் மீது குண்டுகளை வீசின.
1997 : ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய வங்கிக் கொள்ளை வட கரொலைனாவில் இடம்பெற்றது. 17.3 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றில் 95 விழுக்காடு பணம் திரும்பப் பெறப்பட்டது.
2001 : சைபீரியாவில் விமானம் ஒன்றை உக்ரைனின் ஏவுகணை தாக்கியதில் விமானம் கருங்கடலில் வீழ்ந்து 78 பேர் உயிரிழந்தனர்.
2003 : இஸ்ரேலில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
2006 : விக்கிலீக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.
30 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
30 Mar 2026