Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 25 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1912 : சீனத் தேசியவாதிகளின் குவாமிங்தாங் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1920 : போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில், ஓகஸ்ட் 13 இல் ஆரம்பித்த போர் செம்படையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
1933 : சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1944 : இரண்டாம் உலகப் போர் - பாரிஸ் நாசி ஜேர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது.
1955 : கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.
1981 : வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகவும் அண்மித்துச் சென்றது.
1989 : வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் கிட்டவாகச் சென்றது.
1991 : சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.
2003 : மும்பாயில் இரண்டு கார் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
2007 : இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில், 30 பேர் கொல்லப்பட்டு, 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
2007 : கிறீசில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 53 பேர் கொல்லப்பட்டனர்.
2012 : நீல் ஆம்ஸ்ட்றோங், அமெரிக்க விண்வெளி வீரர் இறந்தார்.
33 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
34 minute ago