Ilango Bharathy / 2021 டிசெம்பர் 25 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
1914 : முதலாம் உலகப் போர் - ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறிஸ்மஸ் நாள் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
1926 : ஜப்பானின் பேரரசர் டாயீஷோ இறந்ததை அடுத்து, அவரது மகன் ஹிரோஹிட்டோ பேரரசனானார்.
1932 : சீனாவின் கான்சு நகரில் 7.6 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 70,000 பேர் இறந்தனர்.
1941 : இரண்டாம் உலகப் போர் - ஹொங்கொங் மீதான ஜப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.
1947 : சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
1968 : கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 42 தலித் மக்கள், தமிழ்நாட்டில் கீழ் வெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
1977 : இஸ்ரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்.
1979 : சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.
1989 : ருமேனியாவின் முன்னாள் கம்யூனிசத் தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவுக்கும் அவரது மனைவிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 : உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
1991 : சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1991 : உக்ரேன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.
2003 : மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் தரையில் இறங்குவதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.
2004: காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் சந்திரனான டைட்டனில் இறக்குவதற்காக ஹியுஜென்ஸ் என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது 2005 சனவரி 14இல் டைட்டானில் இறங்கியது.
2016 : ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 92 பேரும் கொல்லப்பட்டனர்.
33 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
30 Mar 2026