Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 நவம்பர் 02 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
1914 : ரஷ்யா ஓட்டோமான் பேரரசு மீது போரை அறிவித்தது.
1917 : பிரித்தானியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளராக இருந்த ஆதர் பெல்ஃபர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.
1930 : ஹைலி செலாசி எதியோப்பியாவின் பேரரசன் ஆனான்.
1936 : இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ரோம் - பேர்லின் அச்சு என்ற அச்சு அணியை அறிவித்தான்.
1936 : பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.
1936 : கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.
1953 : பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1963 : தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் பேழ Ngo Dinh Diem இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.
1974 : தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர்.
2000 : பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.
2006 : ஈழப்போர் - கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007 : இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
30 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago