Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 04 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1351 – சியாமின் மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார்.
1461 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1493 – கடலோடி கொலம்பஸ் கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார்.
1519 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார்.
1591 – முதலாவது ஆங்கிலேயர் ரால்ஃப் பிட்ச் என்பவர் இலங்கையில் தரையிறங்கினார்.
1665 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்சு நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.
1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படையின் பீரங்கித் தாக்குதலை அடுத்துஇ பிரித்தானியப் படைகள் பாஸ்டன் முற்றுகையைக் கைவிட்டன.
1789 – நியூயார்க்கில் அமெரிக்க சட்டமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1790 – பிரான்ஸ் 83 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.
1791 – பிரித்தானிய மக்களவையில் கனடாவை கீழ் கனடாஇ மேல் கனடா என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1791 – வெர்மான்ட் அமெரிக்காவின் 14-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1804 – நியூ சவுத் வேல்ஸ் குடியேற்ற நாட்டில் (இன்றைய அவுஸ்;திரேலியாவில்) அயர்லாந்து குற்றவாளிகள் பிரித்தானிய குடியேற்ற அதிகாரிகள் மீது கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1810 – பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து வெளியேற்றப்பட்டது.
1813 – நெப்போலியனுடன் போரிட்ட உருசியப் படைகள் ஜேர்மனியின் பெர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.
1837 – சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது.
1877 – பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் சுவான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.
1882 – பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
1890 – பிரித்தானியாவின் மிக நீளமான 'போர்த் பாலம்' இசுக்கொட்லாந்தில் திறக்கப்பட்டது.
1899 – குயின்ஸ்லாந்து குக்டவுன் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 300 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
1908 – அமெரிக்காவின் கிளீவ்லாந்து நகரில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் உயிரிழந்தனர்.
1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லொஃபோர்ட்டன் தீவுகள் மீது கிளேமோர் நடவடிக்கையை ஆரம்பித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர் பின்லாந்து நாட்சி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.
1960 – பிரெஞ்சு சரக்குக் கப்பல் கியூபாவின் அவானா துறைமுகத்தில் வெடித்ததில் 100 பேர் உயிரிழந்தனர்.
1962 – கமரூனில் இருந்து புறப்பட்ட கலிடோனியன் ஏர்வேய்சு விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 111 பேர் உயிரிழந்தனர்.
1966 – கனடாவின் பசிபிக் ஏர்லைன்சின் டிசி-8-43 விமானம் தோக்கியோ பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்குகையில் வெடித்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.
1970 – பிரான்சின் நீர்மூழ்கிக் கப்பல் யூரிடைசு கடலடியில் வெடித்ததில்இ அதிலிருந்த அனைத்து 547 பேரும் உயிரிழந்தனர்.
1976 – வடக்கு அயர்லாந்தின் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது.
1977 – உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1இ570 பேர் உயிரிழந்தனர்.
1980 – தேசியவாதி ராபர்ட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985 – அமெரிக்காவில் தரப்படும் குருதிக் கொடைகள் அனைத்துக்கும் எயிட்சுக்கான குருதிப் பரிசோதனை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரம் அளித்தது.
1986 – சோவியத் வேகா 1 விண்கலம் ஏலியின் வாள்வெள்ளியின் கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது.
1994 – கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
1996 – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதை அடுத்துஇ 2இ300 பயணிகளை வெளியேற்ற 16 நாட்கள் பிடித்தன.
2001 – லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
2009 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் சூடான் அரசுத்தலைவர் உமர் அல்-பஷீர் மீது போர்க்குற்றங்களும்இ மானுடத்துக்கு எதிரான குற்றங்களும் சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது.
2012 – கொங்கோ தலைநகர் பிராசவில்லியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 250 பேர் உயிரிழந்தனர்.
19 minute ago
41 minute ago
51 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
41 minute ago
51 minute ago
52 minute ago