Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 20 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1602: டச்சு கிழக்கிந்திய கம்பனி உருவாக்கப்பட்டது.
1760: அமெரிக்காவின் மசாசூட்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட தீயினால் 349 கட்டிடங்கள் அழிந்தன.
1815: எல்பா தீவிலிருந்து தப்பி பிரான்ஸுக்கு மீண்டும் வந்த நெப்போலியன் மீண்டும் தனது '100 நாள் ஆட்சியை' ஆரம்பித்தான்.
1861: பாரிய பூகம்பமொன்றினால் ஆர்ஜென்டீனாவின் மென்டோஸா நகரம் முற்றாக அழிந்தது.
1914: உலகின் முதலாவது சர்வதேச பிகர் ஸ்கேட்டிங் சம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் ஆரம்பமானது.
1916: அல்பர்ட் ஐன்ஸ்டைன், புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார்.
1952: ஜப்பானுடனான சமாதான ஒப்பந்தத்தைஅமெரிக்க செனட் சபை அங்கீகரித்தது.
1956:பிரான்ஸிடமிருந்து டியூனிசியா சுதந்திரம் பெற்றது.1990: பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோஸுக்கு எதிராக ஊழல் வழக்கு விசாரணை ஆரம்பமாகியது.
1974: இலண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே ஆன் இளவரசி, அவரது கணவர் கப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
1988: எரித்திரியாவில், எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.
1995: டோக்கியோவில் சுரங்கப்பாதை ஒன்றில் நச்சு வாயுத் தாக்குதல்: 12 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.
2003: அமெரிக்கா மற்றும் ஏனைய 3 நாடுகளின் படைகள் ஈராக் மீது தாக்குதலை ஆரம்பித்தன.
2005: ஜப்பானில் புகுவோகா நகரில் ஏற்பட்ட 6.6 ரிச்சடர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. 100 வருடகாலத்தில் ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பமாக அப்போது அது விளங்கியது.
5 hours ago
15 Sep 2025
15 Sep 2025
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
15 Sep 2025
15 Sep 2025
15 Sep 2025