Janu / 2026 மார்ச் 31 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தட்சிண கைலாயம்' எனச் சிறப்புப் பெயர் பெற்ற திருகோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் தேர்த்திருவிழா (இரதோற்சவம்) செவ்வாய்க்கிழமை (31) காலை 8:00 மணியளவில் பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றதனை தொடர்ந்து, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி அடியார்களுக்கு காட்சியளித்தார்.
ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் அம்பாள் தேரில் பவனி வந்தபோது, திரளான அடியார்கள் "ஆரோகரா" கோஷங்களுடன் தேரை இழுத்துத் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதுடன், மிகுந்த பக்தியுடன் வழிபாடுகளில் ஈடுபட்டதனையும் காணக்கூடியதாக இருந்தது.
வடமலை ராஜ்குமார்







1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago