2026 மே 12, செவ்வாய்க்கிழமை

dd

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழ் (வீடியோ)

Lenin Raj   / 2026 மே 12 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆஸ்திரேலிய மண்ணில் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) Inc. அமைப்பினர், ஆஸ்திரேலிய மத்திய அரசின் செல்வாக்குமிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்களை கான்பெராவில் உள்ள நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பாரம்பரியமும் நவீனமும் இணைந்த இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் கலைப்படைப்பான “கூத்தாடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் பாரம்பரிய கிராமியக் கலைகளை சர்வதேச அளவில் எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது குறித்த ஆழமான உரையாடலாக அமைந்தது.

TFAA சார்பில் இரவீ ஆனந்தராசா, "திரு" மற்றும் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான செல்வின் தாஸ் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

கலை உலகின் மீதான தனது பற்றை வெளிப்படுத்தும் விதமாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்கள், "கூத்தாடி" திரைப்பட நாயகன் செல்வின் தாஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, ஒரு கலைஞனாக அவர் ஆற்றிவரும் மகத்தான சேவையைப் பாராட்டி நெகிழ்ந்தார்.

"வேர்களைத் தேடி ஒரு படைப்பு" - ஆஷ் அம்பிகைப்பாகர் புகழாரம்
இந்த சந்திப்பின் போது உரையாற்றிய கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகர் தெரிவித்ததாவது:

"எம்முடைய வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு உன்னதப் படைப்பாக 'கூத்தாடி' உருவெடுத்துள்ளது. அழியும் நிலையில் உள்ள கிராமியக் கூத்துக் கலைகளையும், நாடக மரபுகளையும் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் பிள்ளைகளிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம். இந்த முயற்சியை முன்னெடுத்த செல்வின் தாஸ் மற்றும் TFAA அமைப்பிற்கு எனது முழுமையான ஆதரவு எப்போதும் உண்டு."

ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தின் கலாசாரத் தூதுவராகச் செயல்படும் கௌரவ ஆஷ் அம்பிகைப்பாகர் அவர்களின் இந்த அர்ப்பணிப்பை, அந்நாட்டு தமிழ் மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பானது, "கூத்தாடி" திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஆஸ்திரேலியா மற்றும் தாயகத் தமிழர்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது. இது உலக அரங்கில் தமிழ் கலைகளுக்கான ஒரு புதிய அங்கீகாரமாகவும், புலம்பெயர் நாடுகளில் கலைப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு பெரும் ஊக்கமாகவும் பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .