Mayu / 2026 ஏப்ரல் 08 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விமானப்படையின் நேரடிப் பங்களிப்புடன் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையம் (Central Bus Stand), இன்று (08) முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் நவீன மற்றும் வசதியான சேவையை வழங்கும் நோக்கில், இந்த நிலையத்தின் உட்கட்டமைப்புகள் வியக்கத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மறுசீரமைக்கப்பட்ட இந்த பஸ் நிலையத்தின் ஒவ்வொரு தளமும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன:
தரைத்தளம்: பேருந்துகள் தரித்து நிற்பதற்கும், பயணிகள் இலகுவாகப் பேருந்துகளில் ஏறுவதற்கும் ஏற்ற வகையில் விசாலமான பஸ் நிறுத்துமிடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தளம்: நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் நலன் கருதி, அவர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்கான நவீன ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் தளம்: பஸ் நிலையத்தின் ஒட்டுமொத்தப் பணிகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைக்கும் நிர்வாக மற்றும் செயல்பாட்டுச் சேவை அலுவலகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையினரின் தொழிநுட்ப மற்றும் மனிதவளப் பங்களிப்புடன் மிகக் குறுகிய காலத்தில் இந்த நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டின் பிரதான போக்குவரத்து முனையம் ஒன்று சர்வதேச தரத்திற்கு இணையாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





9 minute ago
33 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
33 minute ago
35 minute ago
1 hours ago