Mayu / 2026 ஏப்ரல் 08 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
"சிறுவர் உழைப்பைச் சுரண்டாதே" எனும் தலைப்பிலான விழிப்புணர்வு வீதி நாடகங்கள், கொட்டகலை நகரம் மற்றும் கிருஸ்லஸ்பாம் தமிழ் பாடசாலை ஆகிய இடங்களில் அண்மையில் அரங்கேற்றப்பட்டன.
ஹட்டன் தொழிலாளர் திணைக்களத்தின் (ACL) அனுசரணையுடன், சங்கு கலைக்கழகத்தின் தயாரிப்பு மற்றும் நெறியாள்கையில் இந்த நாடகங்கள் மிகக் கலைநயத்துடன் மேடையேற்றப்பட்டன.

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதை வலியுறுத்துவதே இந்த நாடகத்தின் பிரதான நோக்கமாகும். வேலைக்குச் செல்லும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்கள் குறித்தும், அத்தகைய பாதிப்புகளிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு வரலாம் என்பது குறித்தும் பொதுமக்களுக்குத் தெளிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த வீதி நாடகங்கள், சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தன.
எஸ் சதீஸ் , துவாரக்ஷான்
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago