Editorial / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் மிகவும் ரகசியமாக ”சீனர்கள் மட்டும்” என்ற அடிப்படையில் நடத்திசெல்லப்பட்ட சூதாட்ட நிலையமொன்றை கொழும்பு நகர கலால் அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீன பிரஜைகளை அவர்கள் கைது செய்துள்ளனர்.
கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள சொகுசு அடுக்குமாடி கட்டிடமொன்றில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் நேற்று (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 6.5 மில்லியன் ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
கிடைக்கப்பெற்ற இரசிய தகவலை அடுத்து குறித்த நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் அதிகளவான பணம் கொடுக்கப்பட்டு இரண்டு சீன பிரஜைகளால் குறித்த அடுக்குமாடியில் குடியிருப்பொன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கலால் அதிகாரிகள் சோதனையிட்ட சந்தர்ப்பத்தில் 03 பெண்கள் உள்ளிட்ட 11 வாடிக்கையாளர்கள் அங்கு இருந்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள், சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணைகளுக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (22) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
9 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Dec 2025
17 Dec 2025