2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களை காயப்படுத்திய சாரதிக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரலகங்வில, போகஸ்வெவ பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்த கெப் ரக வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை, அரலகங்வில போகஸ் சந்தியில் பிர​தேசத்தில் கெப்ரக வாகனமொன்று, வீதி​யோரத்தில் பயணித்து கொண்டிருந்த 11 மாணவர்கள் மீது மோதியது.

அதில்,மாணவர் ஒருவர்  பலியானதுடன், மேலும் 10 மாணவர்கள் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தனியார் வகுப்பில் இருந்து வீடுகளை நோக்கி திரும்பி கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை அடுத்து கெப் ரக வானத்தின் சாரதி​யை கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் இன்று (10) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, எதிர்வரும் 24ஆம் திகதிவரை சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த விமலசேன என்ற 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X