Lenin Raj / 2026 மார்ச் 18 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை, சலாம் பள்ளிவாசல் வீதி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த ஒற்றை யானை அப்பகுதியில் கடும் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த யானை அச்சுறுத்தல் கடந்த இரண்டு தினங்களாக தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயிர் நிலங்கள் மற்றும் வாழைத் தோட்டங்கள் மட்டுமன்றி, சில வீடுகளின் மதில்களையும் யானை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாத காரணத்தினால், யானையைக் காட்டுக்குள் விரட்டுவதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். அதிகாலை 5 மணி வரை மக்களை அச்சுறுத்தும் வகையில் யானையின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பாறுக் ஷிஹான்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .