Mayu / 2026 மே 05 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முன்னிலை பெற்றுள்ளதையடுத்து, அதன் தாக்கம் இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் எதிரொலித்துள்ளது. யாழ்ப்பாணம், காக்கைதீவு பகுதியில் இன்று விஜய் ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடிக்கச் செய்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
தங்களது வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆதரவாளர்கள் அப்பகுதியிலுள்ள வறிய மக்களுக்கு அரிசிப் பொதிகளையும் வழங்கித் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது கருத்துத் தெரிவித்த ஆதரவாளர்கள், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் போலவே, நடிகர் விஜய்யும் மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்வார் என நாங்கள் நம்புகிறோம். அவரது வழியில் மக்களுக்கான உதவிகளை நாங்களும் முன்னெடுத்து வருகிறோம்," என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தமிழக அரசியலில் விஜய் பதிக்கும் தடம், எல்லைகள் கடந்து ஈழத் தமிழர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதர்ஷன் வினோத்

8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago