2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாவனையாளர் சட்டத்தை மீறிய 26 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Super User   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பாவனையாளர் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 26 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வியாபார நியமத்தையும் பாவனையாளர் சட்டத்தையும் மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட எட்டு வர்த்தகர்கள் நேற்று புதன்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது நீதிவான் ஜே.என்.றிஸ்வானினால் தலா 3,000 ரூபா தண்டப் பணம் வித்திக்கப்பட்டது.

இதேவேளை, கல்முனை பிரதேசத்தில் இனங்காணப்பட்ட 18 வர்த்தகர்களையும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது குற்றத்தின்  தன்மைக்கு ஏற்ப வித்தியாசமான தொகைகளில் மொத்தமாக 20,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

பாவனையாளர் அலுவலக அதிகார சபையின் மாவட்ட இணைப்பதிகாரி எச்.எல்.ஏ. குத்தூஸ் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது பாவனையாளர் சட்டங்களை மீறும் வகையில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, குறித்த விலைக்கு அதிகமான விலையில் பொருட்கள் விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை அகற்றாமல் வைத்திருந்தமை போன்ற குற்றங்களின் பேரிலேயே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • avathanee Thursday, 26 September 2013 05:45 AM

    குத்தூஸ் அவர்களே, அக்கரைப்பற்றில் எல்லா வியாபாரிகளும் நல்லவர்களா? உங்கள் கடமையை நியாயமாக செய்யவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .