2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கல்முனை சைவ மகா சபையின் 44 வது ஆண்டு விழா

Kogilavani   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கல்முனை சைவ மகா சபையின் 44 ஆவது ஆண்டு விழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை ராமகிருஷ்ண வித்தியாலய மண்டபத்தில் சிவமகா சபையின் தலைவர் எஸ்.அரசரெட்ணம் தலைமையில்
இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சுவாமி சதுர்புஜானந்தா சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு ஆன்மீக ஆசியுரை வழங்கினார்.

கல்முனை சைவ மகா சபைக்கு பெரும் பங்காற்றிய ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.புவநேசராஜா, ஓய்வு பெற்ற பெரும்பாக உத்தியோகத்தர் கே.பீதாம்பரம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பல்வேறு ஆன்மீக அறநெறி நிகழ்வுகள் கல்முனை சைவ மகா சபையின் 44 ஆவது ஆண்டு விழாவில் இடம்பெற்றன.




  Comments - 0

  • Selva Tuesday, 01 October 2013 06:07 AM

    பெரிதாக அலட்டிக்கொள்ளும் சைவ மஹா சபையின் இத்தனை கால அடைவுகள் என்ன? மாலைகளுக்காகவும் மேடைகளில் அலட்டிக்கொள்வதற்கும் தானா சைவ மகாசபை. சைவ சமயத்தின் வளர்ச்சிக்காக எதைசெய்து கிழித்தது இது? மேடையில் என்ன பேசுவது என்பது தெரியாமலே பேசும் மைக் மேனியா நோய் கொண்டவர்களும் வெறும் தலைமையை தாங்களாக கேட்டு வாங்கி கொள்பவர்களுக்கும் தான் இது. சும்மா பேய்க்காட்டி திரிபவனுக்கெல்லாம் ஒரு மேடையும் மைக்கும். இளைஞர்களுக்கு வழி விட்டு ஒதுங்குங்களேன். இன்னும் ஊரையும் ஏமாத்தி உங்களையும் ஏமாத்தி... இன்னு ஏன் இந்த ஆசை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .