2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மதுபோதையிலிருந்த 04 பொலிஸார் கைகலப்பில்; விசாரணை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 27 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 04  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 04  பேர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு  மதுபோதையில் இருந்தபோது, ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலும் மற்றையவர் நாவிதன்வெளி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .