2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் தண்டம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 26 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கஞ்சா வைத்திருந்த நபரொருவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் வித்தித்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த நபரை இன்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போதே நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்.

இந்த நபர் முன் குற்றமும் புரிந்துள்ளதனால் அவருக்கு 10,000 ரூபா தண்டமாக விதிப்பதாக அறிவித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை றாஸிக் பரீட் வீதியில் கஞ்சா வைத்திருந்த நபரை இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று புதன் கிழமை கைது செய் பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.


  Comments - 0

  • avathanee Saturday, 28 September 2013 04:14 AM

    தயவு செய்து குற்றவாளிகளின் பெயருடன் பிரசுரிக்கவும்.. அதுதான் மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .