2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிடிக்கப்பட்ட 26 மாடுகளை மகாஓயா மேச்சல் தரையில் விடுமாறு உத்தரவு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 26 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

கட்டாக்காலிகளாக திரிந்த நிலையில் பிடிக்கப்பட்ட 26 மாடுகளையும் மகாஓயா பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்து மகாஓயா மேச்சல் தரையில் விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வீதிகளில் கட்டாக்காலிகளாக திரிந்த மேற்படி 26 மாடுகளையும் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து பிடிக்கப்பட்ட 26 மாடுகள் தொடர்பில்  பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் நேற்றையதினமே அறிக்கை சமர்ப்பித்தபோது, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

வீதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகளினால் ஏற்படும் விபத்துகள், பயிர்ச்செய்கைகள் சேதப்படுத்தப்படுவது, வீதிகள் அசுத்தமாக்கப்படுவது போன்ற காரணங்களினால்  கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தித் தருமாறு சிவில் பாதுகாப்புக் குழுவினர்கள் திருக்கோவில் பொலிஸாரிடன் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், கால்நடைகளை வீதிகளில் விட வேண்டாமென்று ஒலிபெருக்கி மூலமாக பொலிஸார் பலமுறை அறிவித்தபோதிலும், கால்நடை வளர்ப்போர் அறிவித்தல்களை  மீறி கால்நடைகளை வீதிகளிலிருந்து கட்டுப்படுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை வீதிகளில் கட்டாக்காலிகளாக திரிந்த 26 மாடுகளை பொலிஸார் பிடித்து, பொலிஸ் நிலையத்தில் கட்டிவைத்தனர்.

மேலும், இது தொடர்பில் பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் அறிக்கையும் சமர்ப்பித்தனர்.

இதேவேளை, பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் இதுவரையில் ஒருவரும் உரிமை கோரி பொலிஸ் நிலையத்துக்கு வரவில்லையெனவும் பிடிக்கப்பட்ட  மாடுகளை மகாஓயா பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .