2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

காடழித்த 31 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, வட்டமடு மேற்குக்கரை பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடு அழித்ததாகக் கூறப்படும் 31 பேரை அம்பாறை விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 5  பெண்களும் அடங்குவதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 2 முச்சக்கரவண்டிகளையும் 2 மோட்டார் சைக்கிள்களையும் 5 கோடாரிகளையும் 15 வெட்டுக்கத்திகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

கைதுசெய்யப்பட்ட  மேற்படி 31 பேரும் திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில், மேற்படி 31 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0

  • akkarayan Tuesday, 01 October 2013 05:26 PM

    அவங்கட காணிக்குள்ள வேலை செய்தா தப்பா..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .