Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூன் 26 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கிழக்கு மாகாணத்தில் ஜப்பான் ஜெய்க்கா திட்டத்தின் மூலம் 600 மில்லியன் ரூபா செலவில் கஷ்டப் பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம், கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களின் குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நேற்று சனிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே,எம்.இர்ஷாத் தலைமையில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸ்வரன், குடிநீர் விநியோகத்திட்டத்தின் பணிப்பாளரும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளருமான எம்.உதயகுமார், அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன உதவி பணிப்பாளர் யூ.எல்.அலியார், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக் மற்றும் திணைக்களத் தலைவர்கள், ஜெய்க்கா திட்டத்தின் உத்தியோகத்தர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்...
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் யுத்தம், சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 200 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் விநியோகத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை ஐப்பான் நாட்டின் ஜெய்க்கா திட்டத்தின் மூலம் வீதி அபிவிருத்திக்கு 4500 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டு அவ்வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளை, அரசாங்கமும் கூடிய நிதிகளை வழங்கி பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
33 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago