Janu / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விச் சேவையில் 150 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலையின் சாதனையைக் கௌரவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (29) முத்திரை ஒன்று வெளியிடப்பட்டது.
சிவப்பு மற்றும் நீலநிறப் பின்னணியில் கல்லூரியின் தனித்துவமான அழகிய முகப்புத் தோற்றத்தையும், கல்லூரியின் இலச்சினையையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்ட இந்த ஞாபகார்த்த முத்திரை இலங்கை ரூபா. 25.00 பெறுமதியுடையதாகும்.
1873 ஆம் ஆண்டில் இயேசு சபை துறவி வண. பிதா. பேர்டினன்ட் பொனெல் இனால் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆண்கள் பாடசாலையானது 150 ஆவது ஆண்டினைப் பூர்த்தி செய்கின்றது. இதனைக் குறிக்கும் வகையில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த முத்திரை வெளியிடப்பட்டமை சிறப்பம்சமாகும்.
எம் எஸ் எம் நூர்தீன்






3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago