2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

16 கான பறவைகளை வைத்திருந்தவருக்கு தண்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, நாவிதன்வெளி அன்னமலை பிரதேசத்தில் 16 கான பறவைகளை வைத்திருந்த நபருக்கு 8 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளதுடன் பறவைகளையும் பறக்கவிடுமாறும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் உத்தரவிட்டார்.

அன்னமலை பிரதேசத்தைச்சேர்ந்த 32 வயதுடைய நபருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சவளக்கடை பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) இரவு அன்னமலை தபாலக சந்தியில் வீதிச்சோதனையில் ஈடுபட்டபோது துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த மேற்படி நபரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது உரைப்பை ஒன்றில் உயிருடன் 16 கான பறவைகளை மறைத்து வைத்திருந்த நிலையில் மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டார்.

இப்பறவைகளை இறைச்சிக்காக அவர் கொண்டுசென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மேற்படி நபரை திங்கட்கிழமை (30) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது 8 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு மேற்படி நபருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, 16 கான பறவைகளையும் பறக்கவிடுமாறு நீதவான்  பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .