2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முழு நெல்லையும் அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யூ.எல்.மப்றூக்)

அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து நெல்லை அரசாங்கம் நிர்ணய விலைகளில் கொள்வனவு செய்து வருகின்றபோதிலும், இந்தக் கொள்வனவு குறித்து விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.  

நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக அரசாங்கம் மேற்கொள்ளும் இந்தக் கொள்வனவு நடவடிக்கையின்போது விவசாயிகளிடமிருந்து ஏக்கரொன்றுக்கு ஆயிரம் கிலோகிராம் வீதம் 5 ஏக்கருக்கான நெல் மட்டுமே கொள்வனவு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இவ்வாறு குறிப்பிட்டளவு நெல்லினை மாத்திரம் தம்மிடமிருந்து கொள்வனவு செய்யாமல், தாம் அறுவடை செய்துள்ள முழு நெல்லினையும் அரசாங்கம் நிர்ணய விலையில் கொள்வனவு செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

தற்போது சம்பா ஒரு கிலோ 30 ரூபாவுக்கும், நாடு எனப்படும் நீட்டு நெல் ஒரு கிலோ 28 ரூபாவுக்கும் அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்படுகிறது.

மேலும், சிறுபோகத்தில் தமது நெற்செய்கை நிலங்களுக்காக உரமானியம் பெற்ற விவசாயிகளிடமிருந்து மட்டுமே நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறி;த்த பிரதேசத்தில் நெல் கொள்வனவு செய்யப்படும் போது அப்பிரதேசத்தைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் விவசாயிகள் கோருகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .