2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை ஆசிரியர் நலன்புரிச் சங்கம் உதயம்

Super User   / 2010 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.சரவணன்)

கல்முனை கல்வி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் நலன்புரி விடயங்கள் என்பவற்றைக் கையாள்வதற்கென கல்முனை கல்வி மாவட்ட ஆசிரியர் நலன்புரிச் சங்கம் எனும் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய கல்வி வலயங்களில் உள்ள ஆசிரியர்கள் பல்வேறு தொழில்சார் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இப்பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கென ஆசிரியர் தொழிற் சங்கங்கள் எவையும் இங்கு இல்லை. சில தொழிற்சங்கங்கள் சம்பளம் தொடர்பான செயற்பாடுகளிலேயே கவனம் செலுத்துகின்றன. 

இதனால் கல்முனை மாவட்ட ஆசிரியர் நலன்புரிச் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தில் அங்கத்துவம் பெறவிரும்புவோர் கல்முனை மாவட்ட ஆசிரியர் நலன்புரிச் சங்கம், நீர் விநியோக அலுவலக வீதி, சாய்ந்தமருது-6 எனும் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .