Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல். மப்றூக்)
நெசவுக் கைத்தொழிலுக்கு பெயர் பெற்ற ஒரு பிரதேசம் மருதமுனை! இங்கு உருவாக்கப்படும் சாரன்கள் இந்திய உற்பத்திகளுக்கு நிகரானவை. அல்லது அவற்றை விடவும் சிறப்பானவை என்று கூறப்படுகின்றது.
மருதமுனைப் பிரதேசத்தில் நூறு வருடங்களுக்கும் மேலாக நெசவுக் கைத்தொழில் இருந்து வருகின்றது.
வீட்டுக் கைத்தொழிலாகவும், தொழிற்சாலைத் தொழிலாகவும் நெசவுத் தொழிலை இங்கு செய்து வருகின்றார்கள்.
சுனாமிக்கு முன்னர் மருதமுனைப் பிரதேசத்தில் நெசவுத் தொழில் உச்சத்தில் இருந்தது. தகவல்களின்படி 1084 குடும்பங்கள் சுனாமிக்கு முன்னர், இங்கு நெசவுத் தொழிலைச் செய்து வந்தனர்.
ஆனால், 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரழிவினால் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்த 366 குடும்பத்தவர்கள் தமது பிரதான தொழில் உபகரணங்களை இழந்தார்கள். அவ்வாறு இழக்கப்பட்டவைகளில் 768 தறிகளும் அதற்கான பொருட்களும் முக்கியமானவை.
சுனாமியின்போது இப்பிரதேசத்தில் இழக்கப்பட்ட நெசவுத் தொழில் உபகரணங்களின் பெறுமதி சுமார் 6.82 மில்லியன் ரூபாவெனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
சுனாமியினால் இப்பிரதேசத்தில் 922 பேர் உயிரிழந்து போனார்கள். இவர்களில் 636 பேர் பெண்கள். 286 பேர் ஆண்களாவர்.
மருதமுனைக் கிராமம் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட ஒரு பகுதி. கல்முனையிலிருந்து 2.3 (இரண்டு தசம் மூன்று) கிலோமீற்றர் வடக்காக அமைந்திருக்கும் இதன் பரப்பளவு 04 சதுர கிலோமீற்றர்களாகும்.
மருதமுனையில் 04 ஆயிரத்து 750 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தின் மொத்தச் சனத்தொகை 17 ஆயிரத்து 500 ஆகும்.
நெசவுத் தொழிலில் பல்வேறு படிமுறைகளினூடாகவே துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நூலை வெளிற்றுதல், முறுக்குதல், நிறமிடுதல், அதை உலர்த்துதல், பின்னர் நிறமிடப்பட்ட நூலைச் சுற்றுதல், பாவோடுதல், வீமரம் சுற்றுதல், பா பிணைத்தல் என்று நெசவுக்கு முன்னராக பல நடவடிக்கைகள் உள்ளன.
இவைகளுக்குப் பிறகே துணியை நெய்யும் வேலை ஆரம்பமாகிறது.
நூலை வெளிற்றுவதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட சாரனை உறையிலிடும் நடவடிக்கைகள் வரை இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் மருதமுனைப் பிரதேசத்தில் நெசவுத் தொழில் மிகவும் வீழ்ச்சிடைந்து போயுள்ளது. சுனாமிக்கு முன்னர் நெசவுத் தொழிலில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வந்த பலர் இன்று இந்தத் தொழிலைக் கைவிட்டுள்ளார்கள்.
நெசவுத் தொழிலில் ஈடுபடுவதற்கான நிதிவசதியின்மை, மூலப் பொருட்களுக்கான அதிகரித்த விலை மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கான போதிய சந்தை வாய்ப்பின்மை போன்ற பல காரணங்களால் நெசவுத் தொழிலை வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லை என்று இத்தொழிலில் ஈடுபடுவோர் தமிழ் மிரருக்கு தெரிவித்தார்கள்.
இது மட்டுமன்றி, இப்பகுதியிலுள்ள இளைய தலைமுறையினரும் இந்தத் தொழிலில் இப்போது பெரிதாக ஈடுபாடு காட்டுவதில்லை. மருதமுனையில் நெசவுத் தொழில் வீழ்ச்சியடைந்து வருகின்றமைக்கு இதுவும் பிரதானமானதொரு காரணமாகும்.
இப்படியே போனால், மருதமுனையின் நூற்றாண்டுகால பாரம்பரியமிக்க நெசவுக் கைத்தொழில் இன்னும் சில வருடங்களில் இங்கு அப்படியே மறைந்து போகக் கூடியதொரு ஆபத்தானதொரு நிலை தோன்றலாம்.
நெசவு என்பது ஒரு தொழில் மட்டுமல்ல. அது ஒரு கலை வடிவமுமாகும்.
ஒரு சாரனை 500 அல்லது 600 ரூபாய்களைக் கொடுத்துக் கொள்வனவு செய்து கொண்டு நாம் சென்று விடுகின்றோம். ஆனால், அதை உருவாக்குவதன் பின்னணியிலுள்ள மனித உழைப்புப் பற்றி நம்மில் அநேகமானோர் சிந்திப்பதேயில்லை!
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
Azhar Mohamed Ismail Wednesday, 18 August 2010 10:30 AM
ஊருக்கொரு ஊடகன் இருக்கணும்னு சும்மாவா சொன்னாங்க..இப்போதான் மருதமுனை நெசவு செய்தி வருகின்றது ...தொடரட்டும் உன் ஊடக சேவை உலகமெங்கும்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025