2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காட்டு யானைகளால் விவசாயிகளுக்கு தொல்லை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் தமது விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குடுவில், செங்காமம், யாகுகல, இஸ்மாயில்புரம், புதிய வளத்தாப்பிட்டி, வாங்காமம் மற்றும் மத்திய முகாம் போன்ற பிரதேசங்களில் இரவு வேளைகளில் கூட்டம் கூட்டமாக செல்லும் காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதுடன் குடிசைக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த காட்டு யானைகளை விரட்டுவதற்காக பல ரூபாய்கள் செலவு செய்து பட்டாசுகள் கொழுத்தியபோதிலும், அது பயனற்றுப் போயுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இரவு வேளைகளில் இப்பிரதேசத்திலுள்ள மக்கள் உறக்கமின்றி விடியும் வரை விழித்திருக்க வேண்டிய நிலையில் இருப்பதுடன், மறுதினம் தமது விவசாய நடவடிக்கையிலும் ஈடுபட முடியாமலுள்ளது.

எனவே, வனவிலங்கு திணைக்களமும் விவசாய திணைக்களமும் இணைந்து இந்த காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .