Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரவணன்)
அம்பாறை, ஆலையடிவேம்பு, கூளாவடி பிரதேசத்தில் உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நேருக்கு நேர் மோதியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாகம பிரதேசத்தில் வயல் வேலை முடித்தவிட்டு அக்கரைப்பற்றுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த உறவினர்கள் இருவரும் அக்கரைப்பற்றில் இருந்து சாகம பகுதிக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு கூளாவடியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆலையடி வேம்பு, கோளாவில், சாகம வீதியைச் சேர்ந்த யோகநாதர் (வயது 36) என்பவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் அக்கரைப்பற்று – 08 இராமகிருஷ்ன வீதியைச் சேர்ந்த மா.உருத்திரமூர்த்தி (வயது 37) என்பவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025