Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர், க.சரவணன்)
சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளும் விதமாக கல்லூரி நுழைவாயில் இன்று காலை மூடப்பட்டிருந்தது. எனினும், வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகளாலும் பெற்றோர்களாலும் அது திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்றன.
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி, சம்மாந்துறை முஸ்லிம் தேசிய பாடசாலை ஆகியவற்றைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று சுகவீன லீவுப் பேராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
சம்மாந்துறைக்கு அண்மையில் நியமனம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் ஆசிரியர்களை அவமதித்து வருவதாக குற்றம் சுமத்தி இச்சுகவீன விடுமுறைப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி நுழைவாயில் பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.
அதையடுத்து, பெற்றோர்கள் வலயக் கல்விப் அலுவலகத்திற்கு தகவல் வழங்கியதை அடுத்து, வலயக் கல்வி அதிகாரிகள் பூட்டை உடைத்து நுழைவாயிலைத் திறந்தனர்.
இது குறித்து சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூரை தமிழ் மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்ட போது, "பாடசாலை அதிபரினால் கல்லூரி நுழைவாயில் பூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதனால், நாம் அங்கு சென்று நுழைவாயிலை திறந்து பாடசாலை இயங்க வழிவகுத்தோம். பாடசாலை மூடப்பட்டிருந்தால் பெற்றோர்கள் கடும் ஆத்திரமுற்றவர்காளாக் காணப்பட்டனர். நாம் பாடசாலையை திறக்காவிட்டால் பெரும் பிரச்சினை ஏற்பட்டிருக்கும்" என்றார்.
குறித்த பாடசாலை அதிபரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எம்.கே.எம். மன்சூர் கூறினார்.
குறித்த பாடசாலைக்கு வழமையை விட இன்று அதிக ஆசிரியர்கள் சமுகமளித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சம்மாந்துறை முஸ்லிம் தேசிய பாடசாலையும் சுமுகமாக இயங்கியதாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவித்தார்.
19 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
3 hours ago