Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.ரம்ஸான் )
கல்முனை பிரதேசத்தில் டைனமோ போன்ற தடுக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஒருவரை காரைதீவு விசேட அதிரடிப் படையினர் இன்று அதிகாலை முதல் மாலை வரை காத்திருந்து கைது செய்தனர்.
இது தொடர்பாக காரைதீவு விசேட அதிரடிப் படையின் நிலையப் பொறுப்பதிகாரி சீ.ஐ.பந்துல பெர்னாண்டோ தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில், "எமக்குக் கிடைத்த தகவலையடுத்து இன்று காலை எமது மோட்டார் சைக்கிள் பிரிவுப் படையினர் சீருடையின்றி கடற்கரைப் பள்ளிவாசலை அண்டிய பகுதியில் உள்ள மரங்களின் மேலேறி இரகசியமாக அமர்ந்து கொண்டு, தொலைக் காட்டி மூலம் மாலை வரை அவதானித்தனர். மாலை ஆறு மணியளவில் கரைக்கு திரும்பிய ஒருவரை அனைத்துப் பொருட்களுடன் கைது செய்துள்ளோம்" என்றார்.
மேலும் இரு படகுகளில் வந்தவர்களை தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
கைது செயப்பட்டவரை, சட்டவிரோதமான பொருட்கள், பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் என்பவற்றுடன் இன்று இரவு 9.30 மணியளவில் கல்முனை பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினர் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட பொருட்களோடு காரைதீவு விசேட அதிரடிப் படை நிலையப் பொறுப்பதிகாரி சீ.ஐ.பந்துல பெர்னாண்டோ தலைமையிலான குழுவினரை படத்தில் காணலாம்.
17 minute ago
58 minute ago
3 hours ago
mubarak.sm.kalmunai Thursday, 23 September 2010 12:33 AM
நல்லவிடயம்.
Reply : 0 0
rajan.kalmunai Friday, 24 September 2010 12:38 AM
மீண்டும் மீண்டும் இவ்ர்களைப்போன்றவ்ர்களை பிடிக்க வேண்டும் .
Reply : 0 0
Arafath Monday, 27 September 2010 06:29 PM
Really good news for our fisher man.
Reply : 0 0
u.l.akmal jahan kalmunai Thursday, 30 September 2010 01:06 AM
இனிமேல்தான் கடலில் மீன்கள் அதிகமாக பிடிபடும் .எஸ்.றி.எப்க்கு நன்றிகள் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
58 minute ago
3 hours ago