Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல்.மப்றூக்)
"நான் படிப்பதற்குத் தேவையான சகல வசதிகளையும் அம்மா, அப்பா ஏற்படுத்தித் தந்தார்கள். ஆனால், எப்போதும் படித்துக் கொண்டிருக்குமாறு என்னை அவர்கள் வற்புறுத்தியதில்லை. மாலையில் விளையாடுவேன். இரவு 10.00 மணி வரையும்
படிப்பேன். ஒரேயொரு பாடத்திற்கு மாத்திரமே வகுப்புக்கு சென்று வந்தேன். மிகுதிப் படிப்பெல்லாம் பாடசாலையில் தான்" என இவ்வருட ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக
முதலிடத்தைப் பெற்ற மாணவி மாலவன் சுபதா தெரிவித்தார்.
திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக முதலிடத்தை
பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், மாணவி சுபதா மேற்படி தனது அடைவு குறித்து கருத்துத் தெரிவித்தபோதே, மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவேன் என்று நான் நம்பினேன். ஆனால், இவ்வாறு அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெறுவேன் என நான் நினைக்கவில்லை. இதற்கு இறைவனின் அருள் தான் முதற் காரணமாகும்.
நான் படிப்பதற்குத் தேவையான சகல வசதிகளையும், அம்மா, அப்பா ஏற்படுத்தித் தந்தார்கள். ஆனால், எப்போதும் படித்துக் கொண்டிருக்குமாறு என்னை அவர்கள் வற்புறுத்தியதில்லை. மாலையில் விளையாடுவேன். இரவு 10.00 மணி வரையும்
படிப்பேன். ஒரேயொரு பாடத்திற்கு மாத்திரமே வகுப்புக்கு சென்று வந்தேன். மிகுதிப் படிப்பெல்லாம் பாடசாலையில் தான்.
அந்த வகையில், எனது அம்மா, அப்பா, கற்றுத் தந்த ஆசிரியர்கள், எனது கல்லூரியின் அதிபர் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் எல்லோருக்கும் அத்துடன் இறைவனுக்கும் இந்த இடத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் .
சில அர்ப்பணிப்புக்களை செய்தோம்: மாணவி சுபதாவின் தந்தை
மாணவி சுபதா இவ்வாறு பரீட்சையில் சிந்தியடைந்தமை குறித்து அவரின் தந்தை மாலவன் கருத்துத் தெரிவிக்கையில்,
ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் பொருட்டு எமது மகளை அதிகமான பிரத்தியேக வகுப்புகளுக்கு நாம் அனுப்பி சுமைகளைக் கொடுக்கவில்லை. ஆனால், மகளின் படிப்புக்காக சில அர்ப்பணிப்புகளை எமது குடும்பத்தினர் செய்தனர்.
எனது மகளின் சாதாரண செயற்பாடுகள் அனைத்தையும் நாம் அனுமதித்தோம். பாடசாலை விட்டு வந்த பிறகு, மாலை வேளைகளில் அவள் விளையாடுவாள். அதிகமான பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்பி அவர் மீது நாம் ஒருபோதும் சுமைகளைத் திணிக்கவில்லை.
ஆனால், கடந்த 6 மாதங்களாக தொலைக்காட்சி பார்ப்பதற்கு அவளை நாம் அனுமதிக்கவில்லை. அதை மகளும் ஏற்றுக் கொண்டாள். அதனால், நாமும் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டோம். அதேபோன்று, அவளின் சில சுற்றுலா ஆசைகளையும் இந்தப் பரீட்சைக்காக ஒத்திவைத்தோம்.
பரீட்சைக்குத் தயாராகும் எமது மகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதற்காக, நாங்கள் நிர்மாணித்துக் கொண்டிருந்த எங்கள் வீட்டின் கட்டட வேலைகளை இடையில் நிறுத்தி வைத்தோம்.
இவை, அனைத்துக்கும் சேர்த்து எமது மகள் எங்களுக்கு எல்லையற்றசந்தோசத்தைத் தேடித் தந்துள்ளாள்" என்றார்.
மேற்படி மாணவி சுபதாவின் தந்தை மாலவன் வங்கியொன்றில் கடமை புரிகின்றார். சுபதா, ஆரம்ப வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் கற்று, பின்னர் மூன்றாம் வகுப்பிலிருந்து தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் கற்று வருகின்றார்.
தற்போது இவர் கல்வி கற்கும் கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 05 வரையிலான வகுப்புகளே உள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமார் 300 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் அதிபர் உள்ளடங்கலாக 14 ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்தப் பாடசாலை சார்பாக, கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 12 மாணவர்களும், 2008ஆம் ஆண்டு 9 மாணவர்களும் சித்தியடைந்ததாக பாடசாலையின் அதிபர் சந்திரேஸ்வரன் தெரிவித்தார்.
(மாணவி சுபதா, தனது பெற்றோருடனும் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய அதிபர் சந்திரேஸ்வரனுடனும் படங்களில் காணப்படுகிறார்.)
15 minute ago
56 minute ago
3 hours ago
Dr.G.Sugunan Friday, 24 September 2010 05:04 AM
எனது மகள் சுபதாவிற்கு பெரியப்பாவின் பாராட்டுக்கள். நீங்கள் மேலும் மேலும் கல்வியில் சிறந்த நிலையை அடைய இறைவன் அருள் புரிவான்.
பெரியப்பா, பெரியம்மா, சுபீட்சன், இலட்சியன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
56 minute ago
3 hours ago