2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பொலிஸ் நடமாடும் சேவை

Super User   / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

                                       (எஸ்.எம்.எம்.ரம்ஸான்)

பொதுமக்களின்  அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடமாடும் சேவையொன்று கல்முனை பொலிஸாரின் ஏற்பாட்டில்  மருதமுனை புலவர்மணி சரிபுடீன் வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அடையாள அட்டை, பொலிஸ் பதிவு , வாகன சாரதி அனுமதிப் பத்திரம்,  கடவுச் சீட்டு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் என்பவற்றை துரிதகதியில் இலவசமாக பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அத்துடன், வைத்திய சிகிச்சை, இரத்ததானம் வழங்கல்,  சிறுவர் மற்றும் பெண்களுக்கான நலன் பேணல், உளவள ஆலோசனை வழங்கல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.
 
2009ஆம் அண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசு, இலவச தென்னங்கன்று, விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
 
நடமாடும் சேவையில் அம்பாறை மாவட்ட தெற்கு பிரதி பொலிஸ்மா  அதிபர் ரன்ஜித் வீரசூரிய, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சர் எம்.என்.எஸ்.மென்டீஸ், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி   எஸ்.எச்.அர்.சிரான் பெரேரா, அம்பாறை மாவட்ட மோட்டார் போக்குவரத்து பரிசோதகர் ஏ.எல்.எம்.பாறுக், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எல்.எம்.ரஹ்மான்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

alt

alt

alt
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .