Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன் இரட்டை ஆர்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. வைத்தியசாலையை பாதுகாக்கும் குழு என்ற பெயரில் துண்டுப்பிரசுரமொன்றையும் வெளியிட்டு பொது மக்களின் ஒத்துழைப்புடன் பலத்த மழையையும் பாராது இன்று காலையில் வைத்திய சாலைக்கு முன் ஆர்பாட்டமொன்றைச் செய்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சாமித்தம்பி ராஜந்திரனை வைத்தியசாலையைவிட்டு வெளியேரும் படி கோஷமிட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த அமைப்பின் செயளாலர் சுலேந்திரக்குமார் கருத்து தெரிவிக்கையில்... '100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இவ்வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் இந்த வைத்திய அத்தியட்சகரை உடனடியாக இடமாற்ற வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும்' எனக் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பி.தாமோதரன் என்பவர் கருத்து கூறுகையில் 'நானோரு சிறுநீரக நோயாளி. பையுடன் அலைகிறவன். மாதத்திற்கு ஒருமுறை இந்த பையை மாற்றச்செல்லும்போது கடினமான முறையில் நடந்து கொள்கிறார்கள் இந்த வைத்தியரின் ஆதரவாளர்கள்...' என்றார்.
இவ்வேளையில் அவ்விடத்திற்கு வருகை தந்த திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பி.எம்.பியசேன ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதிப்படுத்த முட்பட்டவேளையில் அவர்கள் கூச்சலிட்டு அவ்விடத்தை விட்டு அவரை வெளியேற்றினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதன் பின்னர் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் வைத்தியர்கள், தாதிமார் உட்பட சிற்றூழியர்களும் வைத்திய அத்தியட்சகர் சாமித்தம்பி ராஜந்திரனை ஆதரித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களின்; தகாத வார்த்தைப் பிரயோகத்தை எதிர்த்தும் வைத்தியசாலைக்கு வெளியே இரண்டு மணி நேரம் தங்களது எதிர்ப்பைக் காட்டினார்கள்.
இது தொடர்பாக வைத்தியர்கள் தாதிமார் உட்பட சிற்றூழியர்கள் கருத்து தெறிவிக்கையில்... இவர்கள் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது. வைத்தியசாலையில் கடமையாற்றும் எங்களுக்குத்தான் உண்மை தெரியும். தனது கடமையைச் சரிவரச்செய்யாத சில ஊழியர்களின் மறைமுகமான வேலைதான் இவ்வார்ப்பாட்டம் என்றனர்.
15 minute ago
56 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
56 minute ago
3 hours ago