Kogilavani / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஸாஹிரா பத்திரிகை வெளியீட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த 'ஸாஹிரா' பத்திரிகையின் 25 வது வெள்ளிவிழா மலர் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், கல்லூரியின் பழைய மாணவர்களான அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக், இலங்கை மின்சார சபை பொறியியலாளர் எம்.எப்.பர்ஹான், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முபாறக் மௌலவி ஆகியோர் உரையாற்றியதுடன் சிறப்பு பிரதிகளையும் பெற்றுக் கொண்டனர்.
.jpg)
.jpg)
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago