2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மேயர் பதவி காலம் முடிந்தவுடன் அரசியலிலிருந்து ஓய்வு: மசூர் மௌலானா

Super User   / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கல்முனை மாநகர மேயர் மசூர் மௌலானா தனது மேயர் பதவி காலம் முடிந்தவுடன் அரசியலிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட பதவியில் தொடர்ந்திருந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
76 வயதான மசூர் மௌலானா இலங்கை தமிழரசு கட்சியினூடாக 1954ஆம் ஆண்டு அரசியல் பிரவேசித்தார்.

இதுவரை வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர், செனட்டர், இந்தியவுக்கான உதவி உயர்ஸ்தானிகர், கிராம அபிவிருத்தி சபை தலைவர், திணைக்கள தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக் காலம் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X