Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை பிரதேசத்தில் நேற்று திடீரென்று பெய்த பலத்த மழை காரணமாக, க.பொ.த. சாதாரண பரீட்சையில் சித்திரப் பாடத்திற்கு தோற்றிய மாணவர்கள் தம்மால் வரையப்பட்ட சித்திரங்களை உலர்த்த முடியாத நிலைக்குள்ளாகினர்.
இம்மாதம் 13ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பமான இப்பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது.
நேற்றுக் காலை 8.30 மணிக்கு ஆரம்பமான சித்திரப் பாடத்தின் இரண்டாம் பகுதிக்கும் மாலை 1.30 இற்கு ஆரம்பமான சித்திரப் பாடத்தின் மூன்றாம் பகுதிக்கும் மாணவர்கள் சித்திரங்களை வரைந்து அவற்றுக்கு வர்ணம் தீட்டிக்கொண்டிருந்தபோது, தூவானத்துடன் பெய்த மழையினால் குறிப்பிட்ட நேரத்திற்கு மாணவர்களால் தாம் வரைந்த சித்திரங்களை வர்ணம் தீட்டி உலர வைக்க முடியாமல் போனது.
இதனால் மாணவர்கள் மாத்திரமல்ல நோக்குனர்களும் சிரமங்களுக்கு உள்ளானார்கள்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago