Menaka Mookandi / 2010 டிசெம்பர் 23 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)
இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சட்ட உதவி மன்றமும், அம்பாறை மாவட்ட வழங்கறிஞர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த ஷமனித உரிமைகளும், மனித உயர் செயற்பாடுகளும்ஷ எனும் தலைப்பிலான அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் அறிவூட்டல் வேலைத் திட்டமொன்று இன்று அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஐயந்த பத்திரன தலைமையில் நடைபெற்றது.
இவ்வேலைத் திட்டத்திற்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், விசேட அதிதியாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட வழங்கறிஞர் சங்கத்தின் செயலாளருமான ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி மஹிந்த பீ.கே. லொகுகே, கொழும்பு பல்கலைக் கழகத்தின் சட்டபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபா மஹாநாம, அம்பாறை மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.
இங்கு மனித உரிமைகள், சட்ட உதவிகள், சட்ட ஆலோசனைகள் சம்பந்தமான விளங்கங்களும் அரசாங்க ஊழியர்களுக்கு விளங்கமளிக்கப்பட்டது.


6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago