2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கல்லுடைக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் தூசிப்படலத்தால் சூழல் மாசடைவதாக விசனம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை உதயபுரத்தில் அமைந்துள்ள தனியார் கல்லுடைக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் தூசிப்படலங்கள் சுற்றாடலை  மாசடையச் செய்வதுடன், பிரயாணிகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தி வருவதாக அப்பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்தனர்.


அம்பாறை கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள இத்தொழிற்சாலையில் நாளாந்தம் கருங்கல் உடைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இங்கிருந்து வெளிவரும் தூசிப்படலம் அருகிலுள்ள வயல்வெளிகள், மரம் செடி கொடிகளில் படிந்து காணப்படுவதுடன், இவ்வழியால் பயணிக்கும் வாகனங்களுக்குள் தூசி புகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பிரயாணிகளுக்கும் சுற்றாடலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு இத்தொழிற்சாலை இயங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென சம்பந்தப்பட்டவர்களை பொதுமக்கள் கேட்டுள்ளனர்.


இதேவேளை, சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மலையடிக்கிராமத்திலும் டைனமைற் உபயோகித்து மலைகள் உடைக்கப்படுவதால் சத்தம் மற்றும் தூசுகள் காரணமாக சூழல் மாசடைந்து வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X