2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எஸ்.பண்டிதரத்ன நியமனம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கிழக்கு மாகாண கல்வி, காணி, போக்குவரத்து அமைச்சின் செயலாளராக எஸ்.பண்டிதரத்ன கிழக்கு மாகாண ஆளுனரால் ஜனவரி முதலாம் திகதி முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை நிருவாக சேவையின் மூத்த அதிகாரியான இவர் தற்பொழுது பொலன்னறுவை மாவட்ட மேலதிக அரச அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக தற்பொழுது கடமையாற்றும் உப்புள் வீரவர்த்தன மற்றும் பிரதிசெயலாளராக கடமையாற்றும் எஸ்.தண்டாயுதபதணி ஆகியோர் இம்மாதம் 31ம் திகதியுடன் தனது சேவைகளை முடிவுறுத்திக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X