Menaka Mookandi / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர், ஜெஸ்மின், அப்துல் அஸீஸ்)
தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி ஞாபகார்த்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு சாய்ந்தமருது அல் அமீன் ஸ்ரீலங்கா அமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஊர்வலம் துவாப்பிராத்தனை மற்றும் சிறுவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் என்பன இன்று சாய்ந்தமருதில் இடம்பெற்றன.
அமைப்பின் தலைவர் எம்.ஏ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மௌலவி எம்.எம்.முஸ்தபா சுனாமி அனர்த்தத்தினால் உயர் நீத்த அனைத்து மக்களுக்காகவும் துவாப்பிராத்தனை செய்தார்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசம் அதிக உயிரிழப்புகளை சந்தித்ததுடன் கூடியளவு உடமைகளும் சேதத்திற்குள்ளானது.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை, கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி, மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம், அல் - ஜலால் வித்தியாலயம், றியாலுல் ஜன்னா வித்தியாலயம், மீனவர் சங்க கட்டிடங்கள், ஆஸ்பத்திரி வீதி, தபாலகம், பள்ளவாசல்கள், முன்பள்ளிகள், வாசிகசாலை, பாலங்கள், வீதிகள், மையவாடிகள் போன்றவை முற்றாக அழிந்ததுடன் பெரும் பாதிப்புக்கும் உள்ளானது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவல் சுனாமி அனர்த்தத்தினால் 815 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ளனர்.இதில் சாய்ந்தமருதில் 740 குடும்பங்களும் மாளிகைக்காட்டில் 75 குடும்பங்களும் உள்ளன.
சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள இஸ்மாயில் புரத்தில் 122 வீடுகளும் சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத்திட்டத்திலும் இபாட் வீட்டுத்திட்டத்திலும் 411 வீடுகளும் இதுவரை கட்டிமுடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும் 404 வீடுகள் கட்டப்பட வேண்டியுள்ளன.இவற்றுக்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.



3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago