2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'வாழும்போதே வாழ்த்துவோம்' நிகழ்வில் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 26 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சுயாதீன தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய சமூக சேவைகள் அமைப்பு ஆகியவை இணைந்து அண்மையில் மருதமுனை அஷ்ரப் மண்டபத்தில் நடத்திய 'வாழும்போதே வாழ்த்துவோம்' எனும் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கியஸ்தர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

சுயாதீன தேசிய முன்னணியின் தலைவரும், சட்டத்தரணியுமான இஸ்மாயில் பி. மஆரிஃப் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன் அலி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதன்போது, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X