2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கொங்கிறீட் பால வேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்டதனால் மக்கள் சிரமம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நெய்னாகாடு கிராமத்தையும் றகுமானியாபுர பிரதேசத்தையும் இணைக்கும் கொங்கிறீட் பால வேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்டதனால் கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த பாலத்தை அமைப்பதற்கான கொங்கிறீட் தூண்கள் ஆற்றுக்கு குறுக்காக இடப்பட்டு சுமார் மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில் பாலத்திற்கான கொங்கிறீற்றினை இடும் வேலைகள் எதுவும் நடைபெறாமல் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் தற்கால பாலத்தை அமைத்து ஆபத்தான நிலையில் பிரயாணத்தை மேற்கொண்டு வருகின்றனர். தினம்தோறும் இந்த தற்காலிக பாலத்தினூடாக நூற்றுக்கணக்கான மக்களும் மாணவர்களும் ஆபத்துக்களுக்கூடாக பயணம் செய்கின்றனர்.

நோயாளிகளையோ பொருட்களையோ இப்பாலமூடாக கொண்டுசெல்ல முடியாத நிலையில் மக்கள் அவர்களை தலையில் வைத்து சுமந்து செல்கின்றனர். இதுதொடர்பாக சம்மந்தப்பட்டவர்களிடம் பலமுறை முறைப்பாடு தெரிவித்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்ட இப்பால வேலைகளை தாமதமின்றி முடித்து மக்களது பிரயாண வசதியினை ஏற்படுத்திதருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X