Kogilavani / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சக்திவேல்)
அம்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நவகிரி குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இக்குளத்தின் இரண்டு அடி நீர் திறந்துவிடப்படவுள்ளதாக போரைதீவுபற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதரன் தெரிவித்தார்.
இந்நீர் திறந்து விடும் போது வெள்ளாவெளி பிரதேசத்திற்குட்பட்ட வேற்றுச்சேனை, ஆணைகட்டியவெளி, நாதனவெளி ஆகிய கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலை உள்ளன.
இக்கிராமங்களிலுள்ளவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் மட்டக்களப்பு செஞ்சிலுவை சங்கத்தின் அனர்த்த மீட்பு குழு தயாராகவுள்ளதாக சங்கத்தின் மட்டு கிளை தலைவர் க.வசந்தராசா தெரிவித்தார்.
இக்குளத்தின் நீர் கடந்தவருடமும் இதே மாதத்தில் திறந்துவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
7 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
24 Oct 2025