Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 28 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட், அப்துல் அஸீஸ்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள கிட்டங்கிப் பாலத்தின் நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்குக் காரணமாக அப்பகுதியூடாக போக்குவரத்துச் செய்வதில் மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கிட்டங்கி பழைய பாலத்தை அகற்றி விட்டு அந்தப் பாலத்துக்குப் பதிலாக புதிய பாலமொன்றை அமைக்கும் நடவடிக்கைகள் கடந்த 10 மாதங்களாக இடம்பெற்று வருகின்றது.
இருந்த போதும் பாலத்தின் நிர்மாண வேலைகளில் அரைவாசியளவு கூட நிறைவடையவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
டிசம்பர் காலத்தில் இப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என தெரிந்திருந்த போதும் கூட, பாலத்தை நிர்மாணிப்பவர்கள் அதைப் பூர்த்தி செய்வதில் அக்கறை எடுக்கவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.
கல்முனை மாநகரசபைக்குட்ட பிரதேசங்களிலிருந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் கிட்டங்கிப் பாலத்தினைக் கடந்தே பயணிக்க வேண்டியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இவ்வழியாகப் பயணிக்க முடியாதுள்ளதால், இருபது கிலோமீற்றர் தூரம் அதிகமாகப் பயணிக்க வேண்டியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக தொடர் மழை பெய்து வரும் அதேவேளை, பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தககது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago