2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்,எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்தும் அதனை இரத்துச் செய்யுமாறு கோரியும் இன்று சம்மாந்துறை ஹிஜ்ரா ஜும்ஆப் பள்ளிவாசல் முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.


சம்மாந்துறைப்பற்று பொதுமக்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பெருந்தொகையான மக்கள் ஜும்ஆத் தொழுகையையடுத்து ஈடுபட்டனர். அத்துடன், மகஜரொன்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.


இவ்வார்ப்பாட்டப் பேரணியானது மாணவர் ஒன்றியம், பெற்றோர் அமைப்பு, இளம் ஆசிரியர் அமைப்பு, சம்மாந்துறை ஒழுக்கக் கல்வி மேம்பாட்டு ஒன்றியம், சிறுவர் கல்வி நலன் விரும்பிகள் அமைப்பு, முஸ்லிம் இளைஞர் நலன்புரிச் சங்கம், சமூக வேலைக்கான மக்கள் அமைப்பு போன்றவற்றின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

எதிர்வரும் 3ஆம் திகதி முதல் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் அக்கரைப்பற்று வலயத்திற்கும் அக்கரைப்பற்று  வலயக் கல்விப் பணிப்பாளர் சம்மாந்துறை வலயத்திற்கும் இடமாற்றம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X