Suganthini Ratnam / 2011 ஜனவரி 02 , மு.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை பிரதேசசபை பிரிவிற்குட்பட்ட கைகாட்டிபி பிரதேசத்தில் அமைந்துள்ள விலங்கு கொல்களத்தினை (மடுவம்) அங்கிருந்து அகற்றி மக்கள் குடியிருப்பற்ற பிரதேசத்தில் அமைப்பதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளுமாறு அப்பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.
1986ஆம் ஆண்டு இவ்விலங்கு கொல்களம் திறந்துவைக்கப்பட்டபோது, அப்பிரதேசம் குடியிருப்பற்ற பிரதேசமாகவிருந்தது. தற்போது இப்பிரதேசத்தில் மக்கள் குடியேறி வீடுகளை அமைத்துள்ளனர்.
இவ்விலங்கு கொல்களத்திலிருந்து வரும் துர்நாற்றத்தினால் வீடுகளில் இருக்கமுடியாதுள்ளதுடன், சுகாதார ரீதியாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்.
மேலும், இவ்விலங்கு கொல்களத்திலிருந்து வீசப்படும் எலும்புகள் போன்ற கழிவுப்பொருட்களை நாய்கள் தூக்கி வந்து வீடுகள், வீதிகளில் போடுகின்றன. மேற்படி கழிவுப்பொருட்கள் காரணமாக பாம்புகள் வருவதுடன், அருகிலுள்ள குளம இதர கழிவுப்பொருட்களினால் அசுத்தமடைவதாகவும் அம்மக்கள் குறிப்பிட்டனர்.
எனவே, இவ்விலங்கு கொல்களத்தினை அப்பிரதேசத்திலிருந்து அகற்றி வேறிடத்தில் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மக்கள் கோரியுள்ளனர்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago